Latestமலேசியா

யாசினின் குற்றச்சாட்டுகளை மறுத்த சிறைச்சாலைத் துறை

கோலாலம்பூர், செப்- 21 -சிறைச்சாலை வாழ்க்கை பணம் மற்றும் செல்வாக்கை அடிப்படையாகக் கொண்டது என பாடகரும் இசையமைப்பாளருமான Yasin Sulaiman கூறியுள்ளதை சிறைச்சாலைத் துறை மறுத்துள்ளது.

கைதிகளிடையே அவர்களின் நிதி நிலையை அடிப்படையாகக் கொண்ட படிநிலை அமைப்பு இருப்பதாக யாசின் அண்மையில் பாட்காஸ்ட் ஒன்றில் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த சிறைச்சாலைத் துறை கொள்கைக்கான மூத்த இயக்குநர் Mohamad Rosidek Musa, அத்தகையதொரு விஷயம் ஏதும் சிறைகளில் இல்லை எனத் தெளிவுபடுத்தினார்.

சில எதிர்மறையான சம்பவங்கள் நிகழக்கூடும். ஆயினும், அவற்றைக் கட்டுப்படுத்தவும் முறையற்ற நடத்தைகளைத் தடுக்கவும் சிறைச்சாலைத் துறை நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளைக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Yasin பிரபலமானவர் என்பதால் அவரது கருத்துகள் சமூக ஊடகங்களில் அதிக கவனம் பெற்றுள்ளதாக Rosidek குறிப்பிட்டார். அதைப் பற்றி பேசுவதை விட சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பலர் வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளதால், அவர்களின் நேர்மறையான முன்னேற்றங்களில் கவனம் செலுத்துவது நல்லது என அவர் கூறினார்.

2023 ஆம் ஆண்டு நவம்பரில் போதைப்பொருள் தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகளில் இருந்து Yasinனை பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றம் விடுவித்தது. எனினும், அவரை பேராக்கில் உள்ள Bahagia Ulu Kinta மருத்துவமனையில் தங்க வைத்து சிகிச்சை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!