Latestமலேசியா

மலேசியர்களின் சராசரி மாதச் சம்பளம் RM3,803 ஆக உயர்வு

கோலாலம்பூர், செப்டம்பர் 21 – 2025ஆம் ஆண்டில் மலேசிய குடிமக்களின் சராசரி மாதச் சம்பளம் மற்றும் ஊதியம் 4.1 விழுக்காடு உயர்ந்து 3,803 ரிங்கிட்டாக அதிகரித்துள்ளது. 2024ஆம் ஆண்டு இது 3,652 ரிங்கிட்டாக இருந்ததென மலேசிய புள்ளிவிவரத் துறையான DOSM தெரிவித்துள்ளது.

இதேவேளை, மாதச் சம்பளத்தின் நடுத்தர மதிப்பு 5.3 விழுக்காடு உயர்ந்து 2,940 ரிங்கிட்டாக கப் பதிவாகியுள்ளது. 2024ஆம் ஆண்டு இது 2,793 ரிங்கிட்டாக இருந்தது.

துறைகளில், சுரங்கம் மற்றும் குவாரி துறை அதிகபட்ச சராசரி மாதச் சம்பளமாக 6,175 ரிங்கிட்டை பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து சேவைகள் துறை 3,993 ரிங்கிட் , உற்பத்தித்துறை 3,357 ரிங்கிட், கட்டுமானத்துறை 3,188 ரிங்கிட் மற்றும் விவசாயத்துறை 2,575 ரிங்கிட் எனப் பதிவாகின.

திறன் அடிப்படையில், திறன்மிக்க பணியாளர்களின் சராசரி மாதச் சம்பளம் 5,799 ரிங்கிட்டாக இருந்தது. மாநிலங்களில் புத்ராஜெயா 5,417 ரிங்கிட், கோலாலம்பூர் 4,955 ரிங்கிட் மற்றும் சிலாங்கூர் 4,258 ரிங்கிட் என தேசிய சராசரியை விட அதிகமாகப் பதிவாகின.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!