
லக்னோவ் – ஜூலை-6 – வட இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் மணமகனை ஏற்றியிருந்த SUV வாகனம் கல்லூரி ஒன்றின் வேலி தடுப்பை மோதி விபத்துக்குள்ளானதில், மணமகன் உட்பட குறைந்தது 8 பேர் பலியாயினர்.
அவர்களில் இரு சிறார்களும் அடங்குவர்; வெள்ளிக்கிழமை மாலை நிகழ்ந்த அவ்விபத்தில் மேலுமிருவர் படுகாயமடைந்துள்ளனர்.
SUV படுவேகமாக ஓட்டிச் செல்லப்பட்டு, ஜனதா இந்தர் கல்லூரியை அடைந்ததும் கட்டுப்பாட்டை இழந்து வேலி தடுப்பை மோதிக் கவிழ்ந்தது.
கல்யாணக் கனவில் சென்ற மணமகனுக்கு அப்பயணமே கடைசியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து போலீஸார் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளனர்.
இந்தியாவில் ஆண்டு தோறும் சராசரியாக 178,000 பேர் சாலை விபத்துகளில் மரணமடைவதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அவர்களில் 60 விழுக்காட்டினர் 18 முதல் 34 வயதுக்குட்பட்ட இளையோர் ஆவர். கடந்தாண்டு கூட அந்நாட்டில் 480,000-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவாகின.