Latestமலேசியா

தெக்குன் ஸ்பூமி கோஸ் பிக்; 51 இந்திய வர்த்தகர்களுக்கு மொத்தம் RM2.5 மில்லியன் மதிப்பிலான கடனுதவிக்கான காசோலை வழங்கப்பட்டது – டத்தோ ரமணன்

கோலாலம்பூர், ஜூன் 13 – இந்திய வர்த்தகர்களுக்கு உதவும் நோக்கில் தெக்குன் கீழ் ஸ்பூமி கோஸ் பிக் (Goes Big) எனும் திட்டம் கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் 60 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்ட நிலையில், கடந்த 2 மாதங்களில் ஏறக்குறைய 7.2 மில்லியன் ரிங்கிட் மதிக்கத்தக்க 81 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

அதில் 51 விண்ணப்பங்கள் தெக்குனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, இன்று அந்த வர்த்தகர்களுக்குக் காசோலையாக அந்த நிதி ஒப்படைக்கப்பட்டது. ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த விண்ணப்பங்களின் மொத்த மதிப்பு 2.5 மில்லியன் ரிங்கிட்டாகும்.

இவ்வேளையில், இந்த ஸ்பூமி கோஸ் பிக் கடனுதவி பெற்ற சிலர் வணக்கம் மலேசியாவிடம் அவர்களின் எதிர்கால வர்த்தக விரிவாக்கம் குறித்துப் பகிர்ந்து கொண்டனர்.

இதனிடையே, அதில் மேலும் 27 பேரின் விண்ணப்பங்களும் விரைவில் பரிசீலனை செய்து ஒப்புதல் வழங்கப்படும் என்று தொழில்முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஸ்ணன் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்திய சமுதாயத்தின் வர்த்தக மேம்பாட்டிற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் திட்டங்கள் குறித்து குறை கூறி கொண்டிருந்தால் எதுவும் கிடைக்காது என்றும் டத்தோ ரமணன் சுட்டிக்காட்டினார்.

கடந்த 2008 முதல் மே 2024 வரை சுமார் 25,559 இந்திய வர்த்தகர்கள் இந்த ஸ்பூமி கடனுதவி திட்டம் வழி பலனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!