
கோலாலம்பூர், ஏப் 20 – தனது சொந்த நாட்டிலிருந்து தப்பி வந்து இந்த நாட்டில் பதுங்கியிருந்த தென் கொரியர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
புக்கிட் ஜாலிலில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் குற்றப் புலனாய்வுத் துறையால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் , உதவி கமிஷனர் முகமட் ரொஸ்டி டாவுட் ( Mohd Rosdi Daud) தெரிவித்தார்.
“இந்த விவகாரம் தொடர்பில் 1959 / 63 குடிநுழைவுச் சட்டங்களின் பிரிவு 15(1)(c)-இன் கீழ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதே வேளையில் சந்தேக நபர் மலேசியாவில் எவ்வளவு காலம் இருந்தார் என்று கேட்டபோது, அந்த விவகாரம் இன்னும் விசாரணையில் இருப்பதாக முகமட் ரொஸ்டி குறிப்பிட்டார்.
மலேசியாவிற்குத் தப்பி வருவதற்கு முன்பு, தென் கொரியாவில் செய்த குற்றச் செயல்கள் தொடர்பாக அங்கு அவர் தேடப்பட்டு வந்தார் என்று தெரியவருகிறது.



