Latestமலேசியா

தெலுக் இந்தானில், சித்திரா பெளர்ணமி முன்னிட்டு LT சங்கத்தின் தலைமையில் மருத்துவ முகாம்

தெலுக் இந்தான், ஏப்ரல் 23 – கார்த்திகை பெளர்ணமிக்குப் பின்னர் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்துடன் சேர்ந்து வரும் பெளர்ணமியே சித்ரா பெளர்ணமியாகும்.

அவ்வகையில், இன்று செவ்வாய்க்கிழமை உதித்திருக்கும் சித்திரா பெளர்ணமி திருநாளில் ஆயிரக் கணக்கான பக்தர்களை வரவேற்று வெகு விமரிசையுடன் அத்திருநாளைக் கொண்டாடி வருகின்றது புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான தெலுக் இந்தான், நகர்த்தார் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம்.

இதனை முன்னிட்டு Bagan Datuk Gaya Hidup Sihat எனும் விழிப்புணர்வு சங்கம் நேற்று 22ஆம் திகதி தொடங்கி இன்று 23ஆம் திகதி வரை மருத்துவ முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது.

அச்சங்கத்தின் தலைவர் Dr Narendran Kunasakaran தலைமையில் நடைபெறும் இந்த முகாம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு ஆகும்

அவ்வகையில், Healthy Festivity எனும் இந்த இலவச மருத்துவ முகாமில் பொது மருத்துவ சோதனை, கண், சிறுநீர், இரத்த பரிசோதனை, மேமோகிராம் சோதனை, இரத்த தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் சார்ந்த முகாமில், இதுவரை சுமார் 700 பேர் கலந்துகொண்டு பலனடைந்துள்ளதாக அச்சங்கத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் Reuben James தெரிவித்தார்.

இன்று மாலை 6 மணி வரை தெலுக் இந்தான் மணிகூண்டு அருகாமையில் நடைபெற்றுவரும் இந்த இலவச மருத்துவ முகாமில் அனைத்து பொதுமக்களும் நேரடியாக சென்று சோதனைகளை மேற்கொள்ளலாம்.

Bagan Datuk Gaya Hidup Sihat எனும் இந்த விழிப்புணர்வு சங்கம், ஆரோக்கியம் சார்ந்த முகாம்கள், உடற்பயிற்சி சார்ந்த பயிற்சிகள், Zumba நடன வகுப்புகள் என ஒவ்வொரு ஆண்டும் தெலுக் இந்தான் மற்றும் பாகான் டத்தோ பகுதியில் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!