Latestமலேசியா

தெளிவற்ற விலைக் குறியீடு; புக்கிட் பிந்தாங்கில் பிரபலமான 5 உணவகங்களை ‘கடிந்து’ கொண்ட KPDN

கோலாலம்பூர், ஜூலை-24, கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங்கில் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான 5 நாசி கண்டார் மற்றும் அரபு உணவகங்களை, உள்நாட்டு வாணிபம் மற்று வாழ்க்கைச் செலவின அமைச்சு (KPDN) கடிந்து கொண்டுள்ளது.

விலைக்கட்டுப்பாடு, கையிருப்புக் கட்டுப்பாடு, ஹலால் முத்திரை உள்ளிட்ட அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, நேற்று அங்கு அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

மேற்கண்ட சட்டங்களின் கீழ் விதிமுறை மீறல் எதுவும் கண்டறியப்படவில்லை.

என்றாலும், தெளிவான விலைக் குறியீடு இல்லாத காரணத்தால் அவ்வுணவக நடத்துநர்களை KPDN அதிகாரிகள் கடிந்து கொண்டனர்.

உணவின் அளவுக்கேற்ப விலைக் குறியீடு பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.

வாடிக்கையாளர்கள் குறிப்பாக சுற்றுப் பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க அது அவசியமென KPDN கூறினார்.

விலைக் குறியீடு தொடர்பில் கடந்த 6 மாதங்களில் மட்டும் தலைநகரில் உணவகங்கள் மளிகைக் கடைகள் போன்றவற்றை உட்படுத்தி 50 சம்பவங்கள் பதிவாகின.

மொத்தமாக 15,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டன.

இதற்கு முந்தைய சோதனை நடவடிக்கையில் சிக்கிய உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் உள்ளானதை KPDN சுட்டிக் காட்டியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!