Latest
வியட்நாமை புவாலோய் சூறாவளி தாக்கியதில் 19 பேர் உயிரிழப்பு, 88 காயம்

ஹனோய், அக்டோபர்-1,
வியட்நாமை தாக்கிய புவாலோய் (Bualoi) சூறாவளிக்கு இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர்.
88 பேர் காயமடைந்த வேளை, 13 பேரை இன்னமும் காணவில்லை.
குறைந்தது 8 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை.
105,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமுற்ற வேளை, சூறாவளி கொண்டு வந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் பாதிக்கப்பட்டன.
சுமார் 10,000 ஹெக்டர் நிலப்பரப்பிலான நெல் வயல்களும், விவசாய நிலங்களும் நாசமாகின.
சாலைகள், வடிகால் அமைப்பு, வெள்ளத் தடுப்புச் சுவர்கள், உற்பத்திக் கட்டமைப்புளும் சேதமடைந்துள்ளன.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க் கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பிரதமர் Pham Minh Chinh உத்தரவிட்டுள்ளார்.