Latestமலேசியா

தேசிய ஒற்றுமை குறியீட்டில் கெடாவுக்கே மிகக் குறைந்த மதிப்பெண்

கோலாலம்பூர், பிப்ரவரி-25-2025-ஆம் ஆண்டுக்கான தேசிய ஒற்றுமை குறியீட்டு மதிப்பெண் பட்டியலில் கெடா மாநிலமே குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளது.

தேசிய சராசரியான 0.701-ஐ விட மிகவும் குறைவாக வெறும் 0.593 புள்ளிகளையே அது பெற்றுள்ளது.

பேராக், கிளந்தான், கோலாலம்பூர், சிலாங்கூர், பினாங்கு, புத்ராஜெயா ஆகியவையும் சராசரிக்கு கீழே உள்ளன.

0.817 புள்ளிகளுடன் பஹாங் மாநிலம் மிக உயர்ந்த மதிப்பெண்களைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.

9,400-க்கும் மேற்பட்ட மலேசியர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இனம், மதம், அரசியல் ஆகியவை சமூகப் பிளவுகளுக்கான முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

சமூக ஊடகங்களும் மக்களின் உணர்வுகளை அதிகமாக பாதிப்பதை ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

மலேசியர்கள் பொதுவில் நல்லணக்கத்தோடு அமைதியாக வாழ்ந்து, பன்முகத்தன்மையை மதிக்கின்றனர் என்றாலும், இனங்களுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்த தொடர்ந்து முயற்சிகள் அவசியம் என தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சு வலியுறுத்தியது.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!