Latestமலேசியா

நகைச்சுவை நடிகர் ஹரித் இஸ்கண்டாரின் மனைவி, டாக்டர் ஜெசமின் லிம் விவாகரத்து கோரி மனு தாக்கல்

கோலாலம்பூர், ஜூலை 10 – நகைச்சுவை நடிகர் ஹரித் இஸ்கண்டாரின் மனைவி டாக்டர் ஜெசமின் லிம், விவாகரத்து கோரி, கோலாலம்பூர் ஷரியா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எனினும், அந்த விவாகரத்து மனு எப்பொழுது தாக்கல் செய்யப்பட்டது என்பது தெரியவில்லை.

கோலாலம்பூர் ஷாரியா நீதிமன்றத்தில், ஜெசமின் லிம் தனது வழக்கறிஞருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜெசமினை தொடர்புக் கொண்ட போது, கடந்த மாதம் தாம் விவகாரத்து மனுவை தாக்கல் செய்ததாக கூறியுள்ளார்.

ஆனால், விவாகரத்துக்கான காரணம் குறித்து கருத்துரைக்க அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இவ்வேளையில், அவ்விவகாரம் குறித்து கருத்துரைக்க விரும்பவில்லை என 58 வயது ஹரித்தும் கூறியுள்ளார்.

2010-ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட ஹரித்திற்கும், ஜெசமினுக்கும், 9,11 மற்றும் 14 வயதில் மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!