
கோலாலம்பூர், ஜூலை 7 – தனது நண்பரை கொலை செய்ததாக பாதுகாவலர் ஒருவர் மீது கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
மாஜிஸ்திரேட் S. Arunjothy முன்னிலையில் தனக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அதனை புரிந்துகொண்டதற்கு அடையாளமாக 39 வயதுடைய ஆடவர் ஒருவர் தலையசைத்தார்.
கொலை குற்றச்சாட்டு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்திற்கு உட்பட்டதாக இருப்பதால் அவரிடம் வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த மே மாதம் 25ஆம்தேதி Sentul Taman Intan Baiduriயில் சாலையோரத்தில் இரவு மணி 9.23 அளவில் 44 வயதுடைய நபரை கொலை செய்ததாக அந்த பாதுகாவலருக்கு எதிரான குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் 30 ஆண்டுகளுக்கும் குறையாத அல்லது 40 ஆண்டுகளுக்கும் மேற்போகாத சிறைத் தண்டனை மற்றும் 12க்கும் குறைவான பிரம்படிகள் தண்டனையாக விதிக்கப்படும்.
குற்றவியல் சட்டத்தின் 302 ஆவது விதியின் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
அவருக்கு ஜாமின் அனுமதிக்கப்படவில்லை. அவர் மீதான குற்றச்சாட்டு செப்டம்பர் 10 ஆம்தேதி மீண்டும் மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.