கோலாலம்பூர், ஜூலை-17 – உயிருக்கு உயிராகக் காதலித்த பெண் ஏமாற்றியதில், தனது ஓய்வுகால சேமிப்புப் பணத்தையும் மொத்தமாக இழந்துள்ளார் ஓர் ஆடவர்.
மனைவியை இழந்தவர், பெண்ணொருவருடன் பழக்கமேற்பட்டு திருமணம் செய்துக் கொள்ளும் வரை சென்று விட்டார்.
ஆனால் நம்பியவருக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.
ஆண்டாண்டு காலமாக தாம் சிறுகச் சிறுகச் சேமித்து வந்த EPF பணத்துடன் காதலி கம்பி நீட்டிவிட்ட அவரின் சோகக் கதையை, இஸ்லாமிய மருத்துவ நிபுணர் ஒருவர் தனது facebook-கில் பகிர்ந்துள்ளார்.
EPF பணத்தை தனது சேமிப்புக் கணக்குக்கு மாற்றுமாறு காதலி வற்புறுத்த, அவரும் யோசிக்காமல் காதல் மோகத்தில் பணத்தை அப்படியே மாற்றி விட்டார்.
பணம் வங்கிக் கணக்குக் மாறியக் கையோடு காதலி தலைமறைவாகி, இன்று வரை அவரைக் காணவில்லை.
ஆனால் பணத்தைக் கோட்டை விட்ட ஆடவர், மன உளைச்சலின் எல்லைக்கே போய்விட்டார்.
இதனால் மாதா மாதம் மனோவியல் நிபுணர்களைச் சந்திப்பதோடு, மருந்து மாத்திரைகளை நம்பி வாழ்க்கையைக் கடத்துகிறார்.
அதோடு இஸ்லாமிய மருத்துவ முறையின் உதவியையும் நாடியுள்ளார்.