கோலாலம்பூர், மே 10 – மேலவைத் தலைவர் டத்தோ Mutang Tagal இன்று தேசிய இருதய சிகிச்சை மையமான IJN னில் காலமானார். Azerbaijan னுக்கு அதிகாரபூர்வ வருகை புரிந்த அவர் மே 6 ஆம் தேதி அங்கிருந்து திரும்பி வந்தது முதல் இருதய கோளாறு காரணமாக ஐ.ஜே.என் னில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இன்று காலை மணி 11.46அளவில் அவர் இறந்ததாக மேலவை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
சரவா மாநிலத்தை சேர்ந்தவரான 70 வயதுடைய Mutang Tagal கடந்த பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி மேலவை தலைவராக பதவி உறுதி மொழி எடுத்துக்கொண்டார். அந்த பதவிக்கு நியமிக்கப்பட்ட சரவா டயாக் சமூகத்தின் முதல் தலைவர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். அவர் இதற்கு முன் சரவா , Bukit Mas தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இரண்டு தவணைகள் இருந்துள்ளார்.