மலாக்கா, மே 19- நாடு முழுவதிலும் உள்ள மக்களுக்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் படை சிறந்த மற்றும் தரமான சேவையை மேம்படுத்தும் முயற்சிக்கு 84 புதிய தீயணைப்பு நிலையங்கள் தேவையாகும். மலேசியாவில் தற்போது 337 தீயணைப்பு நிலையங்கள் இருந்தபோதிலும் தீ விபத்துக்களின் ஆபத்து குறித்து குறியீடுகளின் எண்ணிக்கையை பார்க்கையில் தீயணைப்பு நிலையங்கள் அதிகரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் Nga Kor Ming தெரிவித்திருக்கிறார்.
எனவே அவசியம் தேவைப்படும் இடங்களில் முதலில் தீயணைப்பு நிலையங்களை நாங்கள் நிர்மாணிப்போம். நாட்டின் நிதி நிலையைப் பொறுத்தே இது இருப்பதால் கட்டம் கட்டமாக புதிய தீயணைப்பு நிலையங்கள் கட்டப்படும் என அவர் நேற்றிரவு Melaka Bandar Hilir -ரில் செய்தியாளர்களிடம் கூறினார்.