கோத்தா பாரு, ஏப்ரல் 29 – தாய்லாந்து, நாராதிவாட் மாநிலத்திலுள்ள, சுங்கை கோலோக் போலீஸ் நிலையத்தை குறி வைத்து கொள்ளப்பட்ட வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில், நான்கு போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்.
தாய்லாந்து நேரப்படி, நேற்று நள்ளிரவு மணி 12.30 வாக்கில் அந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
எனினும், அந்த தாக்குதலில் காயமடைந்த போலீஸ் அதிகாரிகளின் நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.
சுங்கை கோலோக் போலீஸ் நிலையத்தை குறி வைத்து மேற்கொள்ளப்பட்ட அந்த தாக்குதலுக்கு காரணமான சந்தேக நபர்களை தேடும் பணிகளை தாய்லாந்து போலீஸ் முடுக்கி விட்டுள்ளது.
தாய்லாந்து, நாராதிவாட் மாநிலத்தின், பசேமாஸ் சுங்கை கோலோக் மாவட்டத்திலுள்ள, குவாலோசிரா பகுதியில் நேற்று நள்ளிரவு நிகழ்ந்த அந்த குண்டுவெடிப்பு தாக்குதல், கிளந்தான், கோத்தா பாரு வரை உணரப்பட்டதாக கூறப்படுகிறது.