நாளையத் தூண்கள்: பத்துமலைத் தமிழ்ப்பள்ளியில் இளம் தலைவர்கள் பதவி நியமன விழா

பத்து மலை, ஏப்ரல்-18,
சிலாங்கூர், பத்துமலைத் தமிழ்ப்பள்ளியின் 2026-ஆம் ஆண்டுக்கான இளம் தலைவர்கள் பதவி நியமன விழா நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இன்ஸ்பெக்டர் ரத்னக்குமார், சார்ஜன் கமால் லிங்கம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் டத்தோ புவனேந்திர குமார் ஆகியோர் விழாவினை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தனர்.
மாணவர் தலைவராக அரண் திலிப்குமார் பொறுப்பேற்க, துணைத் தலைவர்களாக ஜனனி மற்றும் தேவ்தர்ஷன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இவர்களுடன் சேர்த்து மொத்தம் 238 மாணவர்கள் தத்தம் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர்.
விழா சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் தான் ஸ்ரீ ஆர். நடராஜா, அறங்காவலர் டத்தோ என். சிவகுமார் மற்றும் பள்ளி மேலாளர் வாரியத்திற்குத் தலைமையாசிரியர் சௌண்டேஸ்வரி கிருஷ்ணன் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.



