ரந்தாவ், ஜூன் 16 – 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நேசா பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின், தாமான் நேசா டெலிமா வீடமைப்பு திட்டம் இவ்வாண்டு வெற்றிகரமாகக் கட்டி முடிக்கப்பட்டது.
சுமார் 8.03 ஏக்கர் நிலத்தில் 68 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
அதில் 62 வீடுகள் இணைவீடுகள் எனவும் 6 பங்களா வீடுகள் கட்டப்பட்டதாகவும் நேசா பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் வாரியத் தலைவர் டத்தோ சசிக்குமார் பழனியப்பன் தெரிவித்தார்.
பல போராட்டங்களுக்குப் பின் வெற்றிகரமாகக் கட்டி முடிக்கப்பட்ட நேசா டெலிமா வீடுகளை வாங்கியவர்களுக்கு, நேற்று தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் தலைமையில் வீட்டுச் சாவிகள் வழங்கப்பட்டது.
இந்த வீடமைப்புத் திட்டத்தில் வீடுகள் வாங்கியவர்களில் 32 பேர் நேசா பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினை சேர்ந்தவர்களாவர்.
அதே வேளையில் வீடுகள் வாங்கியவர்களுக்கு இலவச ஸ்டாம்ப் டூட்டி, 10 சதவீதம் கழிவும் வழங்கப்பட்டதை அதன் பிரதிநிதி Hemanathan Selvaraj கூறினார்.
இதனிடையே, நேசா வீடமைப்புத் திட்டத்தில் வீடுகளை வாங்கிய உரிமையாளர்கள் வணக்கம் மலேசியாவிடம் அவர்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்திய சமுதாயத்தின் சொத்துடமை மேம்பாட்டிற்காக 1974ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட நேசா கூட்டுறவு நிறுவனம், ஒவ்வொரு உறுப்பினரும் சொந்த வீடு கொண்டிருப்பதை இலக்காக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.