Latestமலேசியா

நேவார்க் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது லாரி, விளக்கு தூண் மீது மோதிய விமானம்

நியூ யோர்க், மே-5-அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் உள்ள நேவார்க் விமான நிலையத்தில் நிகழ்ந்த ஒரு பரபரப்பான சம்பவம் வைரலாகியுள்ளது.

இத்தாலியின் வெனிஸ் நகரத்திலிருந்து வந்த United Airlines பயணிகள் விமானம் தரையிறங்கும் போது, திடீரென ஒரு லாரியையும் சாலை விளக்கு தூணையும் மோதி சென்றது.

விமானத்தில் மொத்தம் 221 பயணிகளும், 10 பணியாளர்களும் இருந்தனர்.

இந்த சம்பவத்தில் பயணிகளுக்கும் விமான பணியாளர்களுக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை.

ஆனால், லாரி ஓட்டுநருக்கு இலேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மோதலுக்குப் பிறகும், விமானம் பாதுகாப்பாக தரையிறங்கி, விமான நிலைய நுழைவாயிலுக்கு சென்றது.

இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

விமானம் தரையிறங்கும் போது மிகவும் தாழ்வாக பறந்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தொடக்கக் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!