Latestமலேசியா

காவல் துறையினரைக் கத்தியால் தாக்க முயன்ற பெண் கைது: அப்பெண் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டது

கோலாலம்பூர், செப்-17-கோலாலம்பூர், Chan Sow Lin பகுதியில் காவல் துறையினரைக் கத்தியால் தாக்க முயன்ற பெண் கைது செய்யப்பட்டார். அந்த 20 வயது மதிக்கத்தக்க பெண் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது. காவல் துறையினர் கைது செய்ய முயற்சித்த போது அப்பெண் அவ்வாறு செய்ததாக செராஸ் காவல் நிலையத் தலைவர் உதவி ஆணையர் Mohd Rosdi Daud தெரிவித்தார்.

அப்பெண் கத்தியை எடுத்து காவல்துறையினரைத் தாக்க முயன்றதுடன் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாகவும் அவர் கூறினார். அப்பெண்ணுக்கு முந்தைய குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை.

முதற்கட்ட சிறுநீர் பரிசோதனையில் அப்பெண் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. அதனை அடுத்து அப்பெண் நான்கு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆபத்தான ஆயுதம் அல்லது வழிமுறையைப் பயன்படுத்தி காயம் ஏற்படுத்த முயன்றது, பொது ஊழியரைத் தடுத்தது ஆகியவை தொடர்பான சட்டங்களின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!