அம்ரிட்சர், பஞ்சாப் – ஏப்ரல் 22 – இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவத்தில், கர்ப்பிணியான மனைவியைக் கட்டிலோடு தீ வைத்து எரித்துக் கணவன் கொலைச் செய்திருக்கின்றான்.
அம்ரிட்சர் நகரில் உள்ள கிராமமொன்றில் வெள்ளிக்கிழமை இரவு அச்சம்பவம் நிகழ்ந்தது.
6 மாத கர்ப்பிணியான மனைவியுடன் ஏற்பட்ட சண்டைக்குப் பிறகு சுக்டேவ் சிங் எனும் அந்நபர் அப்படுபாதகச் செயலைச் செய்துள்ளான்.
23 வயதே நிரம்பிய பிங்கி எங்கும் ஓடாதவாறு, அவரைக் கட்டிலோடு சேர்த்து கட்டி வைத்து கணவன் தீ வைத்துள்ளான்.
தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு போலீஸ் வந்துப் பார்த்த போது, பிங்கி உடல் கருகி மாண்டிருந்தார்.
தப்பியோடிய சுக்டேவ், போலீசாரால் கைதுச் செய்யப்பட்டு, அவன் மீது கொலை வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
இருவருக்கும் திருமணமாகி இரண்டரை ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில், பிங்கி இரட்டைக் குழந்தைகளைப் பிரசவிக்கவிருந்தது வேதனையாகும்.