Latestமலேசியா

பட்டவொர்த்தில் பராமரிப்பாளரிடம் விடப்பட்ட 7 மாதக் குழந்தை மரணம்; விசாரணைக்காக பெண் கைது

பட்டவொர்த், மே-8 – பினாங்கு பட்டவொர்த்தில் தனது பராமரிப்பில் விடப்பட்டிருந்த 7 மாத பெண் குழந்தையின் மரணம் தொடர்பில், 30 வயது மதிக்கத்தக்க பெண் கைதாகியுள்ளார்.

விசாரணைக்கு உதவும் பொருட்டு 4 நாட்கள் அவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக, Seberang Perai Tengah போலீஸ் தலைவர் Asisten Komisioner Helmi Aris தெரிவித்தார்.

சுயநினைவற்ற நிலையில் அனுமதிக்கப்பட்ட பெண் குழந்தையொன்று மரணமடைந்திருப்பதாக Seberang Jaya மருத்துவமனை கொடுத்த தகவலின் பேரில் போலீஸ் விசாரணையில் இறங்கிய போது, அக்குழந்தைப் பராமரிப்பாளர் கைதானார்.

வேலைக்கும் செல்லும் நாட்களில் பெற்றோரால் அக்குழந்தை அப்பெண்ணிடம் விட்டுச் செல்லப்பட்டு வந்துள்ளது.

சம்பவத்தன்று தொட்டிலில் குழந்தைத் தூங்கிக் கொண்டிருந்த போது, அது படுத்திருக்கும் வாட்டத்தைச் அப்பெண் சரி செய்ய முயன்றுள்ளார்.

அப்போது குழந்தை பேச்சு மூச்சு இன்றி கிடப்பதைக் கண்டு பதறியவர், உடனடியாக மருத்துமனையில் சேர்த்தார்.

எனினும் அக்குழந்தை பின்னர் உயிரிழந்தது உறுதிச் செய்யப்பட்டது.

பிரேத பரிசோதனையில், மூச்சுக் குழாயில் ஏற்பட்ட தொற்றுக் காரணமாகவே குழந்தை உயிரிழந்தது உறுதியானது.

2001 சிறார் சட்டத்தின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!