Latestமலேசியா

பரபரப்பான சாலையை கடக்க முயன்றபோது கார் மோதியதில் சிங்கப்பூர் ஆடவர் காயம்

ஜோகூர்பாரு, ஏப்-7-பரபரப்பான சாலையைக் கடக்க முயன்றபோது கார் மோதியதில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் காயமடைந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானது.

இந்த விபத்து ஏப்ரல் 3ஆம் தேதி மாலை மணி3.40 க்கு ஜாலான் துன் அப்துல் ரசாக் 2ஆவது கிலோமீட்டரில் நடந்ததாக தென் ஜோகூர் பாரு, போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் ஆணையர் ரவ்ப் செலமாட்( Raub Selamat ) தெரிவித்தார்.

மலேசிய இ-ஹெய்லிங் ஓட்டுநர் அந்தப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அந்த சிங்கப்பூர் ஆடவர் திடீரென சாலையை கடக்க ஓடியதாக தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

அவர் இருவழிச் சாலையின் நடுப்பகுதியை அடைந்தபோது திடீரெனத் திரும்பி வந்ததால் அவரைத் தவிர்ப்பதற்காக ஏற்கெனவே வலதுபுறப் பாதைக்கு மாறியிருந்த அந்த இ-ஹெய்லிங் ஓட்டுநரால், சரியான நேரத்தில் பிரேக் போட முடியாமல் அவரை மோதியதாக ரவ்ப் செலமாட் கூறினார்.

சுற்றுலா முகவராகப் பணிபுரியும் அந்த நபர் , தலை, கைகள் மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டன.

அவர் குடியரசின் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சில மீட்டர்கள் தொலைவில் பாதசாரி மேம்பாலம் இருந்தபோதிலும், ஒரு நபர் தனது கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு சாலையைக் கடக்க முயன்றதை 30 வினாடி டாஷ்கேம் காணொளி காட்டியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!