
பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 19 – ஜோகூர் மாநில இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹீமைப் (TMJ) பற்றி, சர்ச்சைமிக்க பதிவை சமூக ஊடகத்தில் வெளியிட்ட உள்ளூர் ‘graphic’ கலைஞர் Fahmi Reza-வை போலீசார் கைது செய்துள்ளனர்.
புக்கிட் அமான் தலைமையகத்தில் இன்று Fahmi வாக்குமூலம் பதிவு செய்ய வந்திருந்தபோது அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் விசாரணைக்காக அவரது கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை ஜாமினில் விடுவிப்பதற்கான அத்துணை முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் Fahmi-யின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
முன்னதாக TMJ-வை அவமதித்ததற்காக சந்தேக நபருக்கு எதிராக 50-க்கும் மேற்பட்ட போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அவற்றில் 20-க்கும் மேற்பட்ட புகார்கள் ஜோகூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்த புகார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பாக, Tik Tok நேரலை ஒன்றில் பிரதமரை குறிக்கும் வகையில் “PM” என்ற சொல்லுடன் எலி உருவம் கொண்ட ஸ்டிக்கரை பயன்படுத்தியதற்காகவும் Fahmi Reza போலீசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார் என்றும் அறியப்படுகின்றது.



