கோலாலம்பூர், ஏப்ரல்-1, நீல நிற சத்ரியா காரொன்று நெடுஞ்சாலையோர மேட்டுப் பகுதியில் போய் நிற்கும் வீடியோ வைரலாகி நெட்டிசன்களை ‘கலகலப்பூட்டியுள்ளது’.
சம்பவ இடம் குறித்து வீடியோவில் தகவல் இல்லை.
ஆனால் ஏதோ ஒரு நெடுஞ்சாலையில் அந்த ‘வினோத’ விபத்து நிகழ்ந்திருப்பது தெரிகிறது.
வீடியோவைப் பார்த்தவர்கள் காரோட்டுநருக்கு என்ன ஆனது என கவலைப்பாட்டார்களோ இல்லையோ, அக்கார் எப்படி மேட்டில் ஏறியது என்ற விவாதத்தில் தான் குறியாக இருக்கின்றனர்.
மலேசியாவில் ஒரு வழியாகப் பறக்கும் கார் என ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்
ஒரு நெட்டிசன், காரை மேட்டில் இருந்து இறக்க ஓட்டுநர் எப்படித்தான் Towing சேவைக்கு அழைப்பாரோ என அக்கறையில் கேட்கிறார்.
எனக்குத் தெரிந்து சாலையில் நெரிசலை ஏற்படுத்தாத ஒரே விபத்து இது தான் என இன்னொருவர் நகைச்சுவையாகக் கூறினார்.
உண்மையில் நெடுஞ்சாலையில் தடம்புரண்டு தான் அந்த சத்ரியா கார் ‘பறந்து’ போய் மேட்டில் நின்றிருக்கிறது.
அதனை மற்றொரு வீடியோவில் ஆடவர் ஒருவர் கூறுவது கேட்கிறது.
ஆனால் அவர் தான் சத்ரியா காரோட்டியா அல்லது சம்பவத்தை நேரில் பார்த்தவரா எனத் தெரியவில்லை.
எப்படியோ காரை இறக்கிக் கீழே கொண்டு வந்தால், எப்படி அது சாத்தியமானது என்பதை அடுத்த வீடியோவில் போடுங்கள் என அதீத ஆர்வத்தில் நெட்டிசன்கள் கேட்கின்றனர்.