ஷா அலாம், மே 31 – வட துறைமுகத்தில் கடல் அமலாக்க பிரிவின் கிடங்கில் இருந்த எறும்பு தின்னியின் செதில்களை விற்பனை செய்த முறைகேட்டில் ஈடுபட்டதாக சுங்க அதிகாரி ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. 51 வயதுடைய Ahmad Hilmi Ghazali சொத்துக்கள் முறைகேடு செய்ததாக குற்றவியல் சட்டத்தின் 403 ஆவது விதியின் கீழ் ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
இதற்கு முன்னதாக சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட எறுப்புத் தின்னியின் செதில்களை தம்மிடம் ஒப்படைக்கும்படி சுங்கத்துறை அதிகாரி Mohd Aliff Omarரை தூண்டியதாக Ahmad Hilmi மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
கெடா Kuala Mudah வைச் சேர்ந்த Ahmad Hilmi கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கும் அக்டோபர் மாதத்திற்குமிடையே இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது. எறும்புத் தின்னியின் அந்த செதில்கள் தேசிய வனவிலங்கு மற்றும் பூங்கா துறையிடம் ஒப்படைப்பதற்காக சுங்கத் துறையின் கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. அதனை விற்பனை செய்த குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் Ahmad Hilmiக்கு 5 ஆண்டு சிறை மற்றும் பிரம்படியுடன் அபராதமும் விதிக்கப்படலாம் .