Latestமலேசியா

பள்ளிகளுக்கு மதுபான நிறுவனங்களின் நன்கொடை விவகாரம்: அமைச்சரவையின் முடிவு சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கட்டும் – துள்சி நம்பிக்கை

புந்தோங், ஜூலை 27 – பள்ளிகளுக்கு மதுபான நிறுவனங்கள் நன்கொடை அளிப்பது தொடர்பில் அமைச்சரவை அளித்துள்ள விளக்கம் அதன் தொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமென பேராக் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துள்சி மனோகரன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் முந்தைய சுற்றறிக்கை தொடரும் என்றாலும் சீன, தமிழ்ப் பள்ளிகள் கடந்த காலம் போல் நன்கொடை பெறலாம்; அவை நீண்டகாலமாகவே பல்வேறு நிறுவனங்களிடமிருந்து நன்கொடைகளைப் பெற்று வருகின்றன என்பதையும் அமைச்சரவை சுட்டிக் காட்டியுள்ளது.

ம.இ.கா இளைஞர் பிரிவு அஞ்சுவதுப் போல் இங்கு யாரும் பள்ளிகளில் மதுபானத்தை விளம்பரப்படுத்தவில்லை.

அடிப்படை பிரச்னை என்னவென்றால் பள்ளிகளுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் கல்வி அமைச்சுக்கு என்னதான் அதிக நிதி ஒதுக்கப்பட்டாலும், தாய்மொழிப் பள்ளிகள் உள்ளிட்ட ஏராளமான பள்ளிகள் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன.

எனவே அப்பள்ளிகள் பல்வேறு தரப்பிடமிருந்து வரும் நன்கொடைகளை நம்பியே இருக்கின்றன.

அப்படி வரும் நன்கொடைகள் சட்டப்பூர்வமானதா என்பதைதான் பார்க்க வேண்டும்.

தவறான வழியில் வரும் நன்கொடைகளைப் பெற்றால் தான் தவறு.

முறையாகப் பதிவுப் பெற்ற நிறுவனங்கள் அமைப்புகள் கொடுக்கும் நன்கொடையைப் பெறுவதில் தவறில்லையே!

தாங்கள் வெளியிடும் அல்லது தயாரிக்கும் பொருட்களின் பயன்பாடு தொடர்பில் பள்ளிகளுக்கு நிபந்தனை எதுவும் விதிக்காமல் நல்லெண்ண அடிப்படையில் அவர்கள் கொடுக்கும் நன்கொடைகளை ஏன் புறக்கணிக்க வேண்டும்?

நீண்ட காலம் அரசாங்கத்திலிருந்த ம.இ.காவினருக்கு நிச்சயம் இது தெரிந்திருக்கும்.

எனவே இனியும் இது பற்றி சர்ச்சைகளை விட்டு பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயலுவோம் என துள்சி தனறிக்கையில் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!