கோத்தா கினாபாலு, அக்டோபர்-27, சபா, கூடாட்டில் பள்ளிப் பராமரிப்புக் குத்தகைத் தொடர்பில் 600,000 ரிங்கிட்டை லஞ்சமாக வாங்கியதன் பேரில், மாவட்ட கல்வி இலாகாவின் மூத்த உயரதிகாரிகளான ஓர் ஆணும் பெண்ணும், MACC எனப்படும் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தால் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
40 வயது மதிக்கத்தக்க அவ்விருவரும் சபா MACC அலுவலகத்திற்கு வாக்குமூலம் அளிக்க வந்த போது கைதாகினர்.
விசாரணைக்காக இருவரும் அக்டோபர் 30-ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டக் கல்வி இலாகாவிடம் 45,000 ரிங்கிட் போலிக் கோரிக்கையைச் சமர்ப்பித்த வர்த்தகர் முன்னதாக கைதானதை தொடர்ந்து, இந்த இரு உயரதிகாரிகளும் கைதுச் செய்யப்பட்டனர்.
2009 MACC சட்டத்தின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுவதாக, சபா MACC இயக்குநர் டத்தோ எஸ்.கருணாநிதி தெரிவித்தார்.
கூடாட் மாவட்ட கல்வி இலாகா அளவில் பள்ளி நிதிகள் கும்பலொன்றால் மோசடி செய்யப்படுவதாக கூடாட் நாடாளுமன்ற உறுப்பினர் அண்மையில் மக்களவையில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.