Latestஉலகம்விளையாட்டு

பாரிஸ் ஒலிம்பிக்கில் மலேசிய சைக்கிளோட்ட வீரர் அஸிசுல்ஹஸ்னியின் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தது

பாரிஸ், ஆக 11 – பாரிஸ் ஒலிம்பிப் போட்டியில் Keirin சைக்கிளோட்ட பிரிவில் மலேசிய வீரரான Pocket Rocketman என வர்ணிக்கப்படும் டத்தோ அஸிசுல்ஹஸ்னி அவாங்கின் ( Azizulhasni Awang ) போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தது. ஐந்தாவது முறையாக ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கெய்ரின் சைக்கிளோட்ட பிரிவில் கலந்துகொண்ட அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளார். 36 வயதான அஜிசுல் மற்றும் பிரெஞ்சு வீரர் ( Rayan Helal ) ரேயான் ஹெலால் ஆகியோர் டெர்னி (Deny) டிராக்கை விட்டு வெளியேறுவதற்கு முன்பு மிக விரைவாக நகர்ந்ததாகக் கருதப்பட்டதால் நேற்று நடந்த முதல் தேர்வுசுற்று போட்டியில் அஸிசுல்ஹஸ்னியை தகுதி நீக்கம் செய்ய நடுவர் குழு முடிவு செய்தது.

பாரிஸ் ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக பதக்கம் பெறும் வாய்பை பெறுவதற்கு அஸிசுல் சிறந்த அடைவுநிலையில் வெற்றி பெறுவார் என மலேசியர்கள் எதிர்பார்த்திருந்ததால் தற்போது பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டோக்கியோவில் வெள்ளிப் பதக்கம் வென்றதோடு , ரியோ டி ஜெனிரோவில் (Rio de janeiro) நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிர்ச்சியிலிருந்து அஸிசுல்ஹஸ்னி இன்னும் மீளவில்லையென அவரது பயிற்சியாளர் John Beasley தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!