
பாலிங், மார்ச்-29- கெடா, பாலிங் அருகே கம்போங் லண்டாக் பாயாவில் உள்ள வடிகால் மற்றும் நீர்ப்பாசன குடியிருப்பில், தனது வீட்டை விட்டு தனியாக வெளியேறிய ஒரு ஆட்டிசம் குழந்தை, நேற்று மதியம் சுமார் 12.30 மணியளவில் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
பேச்சுக் கோளாறு உள்ள 4 வயது Fayyad Affan Fakhri, வீட்டின் பின் கதவு வழியாகச் சென்றதாக நம்பப்படுகிறது.
இதையடுத்து பாலிங் தீயணைப்பு-மீட்புத் துறை அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
அதில் போலீஸ், பொதுத் தற்காப்புப் படையினர், மற்றும் கிராமவாசிகளும் இணைந்துள்ளதாக, பாலிங் தீயணைப்புத் துறைத் தலைவர் Zulkhairi Tanjil கூறினார்.
சிறுவனத் தேடி மீட்கும் பணிகள் இன்னமும் தொடருகின்றன.