Bintulu- வில் Samalaju தொழில்மய பூங்காவில் நேற்று மாலையில் வெளிநாட்டினருக்கு சொந்தமான தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த தீ விபத்தில் 10 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு பெரிய அளவில் வெடிப்புகள் ஏற்பட்டதோடு வானில் தீப்பந்துகள் மற்றும் கரும்புகையும் காணப்பட்டது தொடர்பான காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன. தீக்காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் சிகிக்சைக்காக Bintulu மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக சரவா தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கை மையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
காயம் அடைந்தவர்கள் குறித்த விவரங்கள் எதனையும் தீயணைப்புத்துறை வெளியிடவில்லை. எந்தவொரு தகவல்கள் மற்றும் அந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்களையும் தொழிற்சாலை உரிமையாளர் வெளியிட மறுத்துவிட்டார். தீயணைப்புப்படை வீரர்கள் வருவதற்கு முன்னதாகவே அந்த தொழிற்சாலையின் அவசர தொண்டூழிய குழுவினர் தீயை அணைத்தனர்.