Latestமலேசியா

பினாங்கில் உணவகத்தில் ஆடவருக்கு வெட்டுக் குத்து; சந்தேக நபர் வீட்டில் சடலமாக மீட்பு

ஜோர்ஜ்டவுன், மார்ச்-3-பினாங்கில் உணவகமொன்றில் ஒருவரை கத்தியால் தாக்கியதாக சந்தேகிக்கப்பட்ட முதியவர், பின்னர் அவரது வீட்டில் இறந்துகிடந்தார்.

முன்னதாக வெட்டுக் குத்துக்கு ஆளாகி காயமடைந்த 58 வயது நபர், இரத்தம் தோய்ந்த நிலையில் போலீஸில் புகாரளித்தார்.

உடனடியாக விசாரணையில் இறங்கிய போலீஸ், சந்தேக நபரை அடையாளம் கண்டு ஜோர்ஜ்டவுனில் உள்ள அவரது வீட்டை நெருங்கியது.

ஆனால், அந்த வீட்டில் 68 வயது ஆடவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி, சம்பவ இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் Pasar Pulau Tikus சந்தைக்கு அருகே ஒரு குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டது.

தாக்கப்பட்டவரும் தாக்கியவரும் அறிமுகமானவர்கள் என்றும், இருவருக்கும் இடையிலான பணப்பிரச்னையே சம்பவத்துக்குக் காரணம் என்றும் தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!