Latestமலேசியா

பினாங்கு ஜெலுத்தோங்கில் தீ விபத்து; வீடும் இரு கார்களும் மோட்டார் சைக்கிளும் அழிந்தன

ஜோர்ஜ் டவுன், ஜூன் 17 – இன்று காலையில் பினாங்கு, ஜெலுத்தோங் தாமான் டேசா பெனியாகாவில் ( Taman Desa) நிகழ்ந்த தீ விபத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த எழுவர் வீட்டை இழந்தைதோடு அங்கிருந்த இரு கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளும் அழிந்தன. இன்று காலை மணி 9 அளவில் அந்த வீட்டின் மேல் மாடியிலிருந்து தீ வேகமாக பரவியதை தொடர்ந்து அவ்வீட்டிலிருந்து அனைவரும் உடனடியாக வெளியேறியதால் அவர்கள் உயிர் தப்பினர். பாதிக்கப்பட்ட வீடு முழுமையாக தீயில் அழிந்தது. அந்த வீட்டிற்கு அருகே இதர வீடுகள் ஒன்றோடு ஒன்று மிக அருகில் இருந்த போதிலும் தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையினால் இதர வீடுகளுக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டதாக Jalan Perak தீயணைப் மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் A’azelan Hassan தெரிவித்தார்.

இதனிடையே வீட்டிலிந்து காரை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டபோது கை மற்றும் முகத்தில் காயத்திற்கு உள்ளானதாக அவ்வீட்டின் குடும்ப தலைவரான 54 வயதுடைய ரஷிட் இஸ்மாயில் ( Rashid Ismail ) தெரிவித்தார். தொடக்கத்தில் ஈர துணியினால் தீயை அணைக்க முயன்றபோதிலும் தீ வேகமாக பரவியதால் ஒன்னும் செய்ய முடியவில்லையென அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!