பிரதமர் பதவிக்கால வரம்பு மசோதா: Menteri Besar & Ketua Menteri பதவிகளுக்குப் பொருந்தாது

புத்ராஜெயா: பிரதமரின் பதவிக்காலத்தை அதிகபட்சம் 10 ஆண்டுகள் அல்லது இரண்டு முழு காலங்கள் என வரையறுக்கும் மசோதா, மாநிலங்களின் முதலமைச்சரான Menteri Besar மற்றும் முதல்வரான Ketua Menteri பதவிகளுக்குப் பொருந்தாது என்று அரசு தெரிவித்துள்ளது.
பிரதம துறையின் சட்டம் மற்றும் நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரான Datuk Seri Azalina Othman, இந்த சட்டமானது பிரதமர் பதவிக்கு மட்டுமே உரியது என்றும், மாநில அரசுத் தலைமைப் பதவிகள் இதில் சேர்க்கப்படவில்லை என்று கூறி விளக்கமளித்துள்ளார்.
இதற்கு முன், பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகள் அல்லது இரண்டு முழு காலங்களாக வரையறுக்கும் மசோதாவை அரசு தாக்கல் செய்யும் என்று அறிவித்திருந்தார்.
இந்த மசோதா, அரசின் நிறுவன மறுசீரமைப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாகவும், இவ்வருட நாடாளுமன்ற அமர்வுக்கான முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாகவும் இருக்கும் என்று அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



