Latestமலேசியா

பிரான்ஸ் நீர் மூழ்கி கப்பல் உடன்பாட்டில லஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டை நஜீப் மறுத்தார்

கோலாலம்பூர், மே 21 – 2002 ஆம் ஆண்டு 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் சம்பந்தப்பட்ட பிரான்ஸின் நீர்மூழ்கிக் கப்பல் கொள்முதல் உடன்பாட்டு கொள்முதலில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஊழலில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லையென முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மறுத்துள்ளார். இந்த உடன்பாட்டிலிருந்து நஜீப் பயனடைந்தார் அல்லது அதன் பேச்சுவார்த்தையில் ஏதேனும் சட்டவிரோதப் பங்கை கொண்டிருந்தார் என்ற கருத்துக்களை அவரது சார்பில் ஆஜராகும் Messrs Shafee & Co நிறுவனத்தின் வழக்கறிஞர் ஷாபி நிராகரித்தார்.

பாதுகாப்பு கொள்முதலில் ஈடுபட்டுள்ள மலேசிய அதிகாரிகளுக்கு ஊதியம் வழங்குவதற்காகக் கூறப்படும் அந்த தொகையில் எதையும் நஜீப் பெற்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று குறிப்பிட்டு, 2024 ஆம் ஆண்டு பிரான்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புளும்பெர்க் (Bloomberg ) அறிக்கையே குறிப்பிடுவதாக நஜீப்பின் வழக்கறிஞர் குழுவினர் தெரிவித்தனர். எங்கள் கட்சிக்காரர் விசாரணைக்கு வர வேண்டும் என்று பிரான்ஸ் வழக்கறிஞர்கள் பரிந்துரைக்கவில்லை, அவருக்கு எதிராக எந்த குற்றப்பத்திரிகையும் கோரப்படவில்லை என்று அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.
இந்த சூழ்நிலையில், புளும்பர்க் கட்டுரை எங்கள் கட்சிக்காரரின் பொறுப்பு குறித்த எந்தப் பிரச்சினையையும் எழுப்பவில்லை, மேலும் அதற்கு நேர்மாறான எந்தவொரு குறிப்பும் உண்மைக்கு அடிப்படையற்றது. 2002 ஆம் ஆண்டு ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்திற்கு முன்னதாக உடன்பாட்டை ஏற்பாடு செய்வதற்காக பாதுகாப்பு நிறுவன நிர்வாகிகளுடனான சந்திப்புகளில் நஜிப் கலந்து கொண்டதாக பிரான்ஸ் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கடந்த ஆண்டு குற்றம் சாட்டியதாக Bloomberg செய்தி வெளியிட்டிருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!