Latestமலேசியா

பிரிக்ஃபீல்ட்ஸ் ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தில் இலவச சுகாதாரப் பரிசோதனை முகாம்; ஏராளமானோர் பங்கேற்பு

கோலாலம்பூர் பிரிக்ஃபீல்ட்ஸ் ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயம் மற்றும் மலேசிய தேசிய புற்றுநோய் சங்கம் (NCSM) இணைந்து ஏற்பாடு செய்த இலவச சுகாதாரப் பரிசோதனை முகாம் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

​பொது மக்களிடையே நோய்களை முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நடைபெற்ற இந்த முகாமில் சுமார் 72-க்கும் மேற்பட்ட பொது மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

​காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் முழுமையான இரத்தப் பரிசோதனை, HbA1c, சிறுநீர் பரிசோதனை, பெண்களுக்கான Pap Smear மற்றும் மனநலப் பரிசோதனைகள் உட்பட பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

​இந்நிகழ்வுக்கு ஆதரவளித்த Himalaya Wellness Malaysia சார்பில், கலந்து கொண்ட பொது மக்களுக்கு இலவச நலவாழ்வுப் பொருட்களும் வழங்கப்பட்டன.

இந்த இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து, தேசிய புற்றுநோய் சங்கத்தின் மூத்த நிர்வாக மேலாளர் Petronilla Josephபும் மருத்துவப் பரிசோதனை நமக்கு எவ்வளவு முக்கியம் என்பதை தேசிய புற்றுநோய் சங்கத்தின் கோலாலம்பூர் – சிலாங்கூர் ஒருங்கிணைப்பாளர் சுஜாதா நாயரும் வணக்கம் மலேசியாவிடம் தெரித்தனர்.

இதனிடையே ஸ்ரீ கிருஷ்ணா கோயில் உதவித் தலைவர் சேகரன் சுப்ரமணியம், இந்நிகழ்வு கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டது குறித்து விளக்கினார்.

இந்தச் சமூகச் சேவையில் பயனடைந்த ஆலய நிர்வாகத்தினரும் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

இதுபோல இலவச மருத்துவ முகாம்கள் ஆங்காங்கே நடத்தப்பட வேண்டும் என்றும், இது அனைவருக்கும் நன்மைப் பயக்கும் என்றும் பொது மக்களில் சிலரும் கூறினர்.

எனவே ஆரம்ப நிலையிலேயே நோய்களைக் கண்டறிவது உயிரைக் காக்கும் என்ற விழிப்புணர்வை சமுதாயத்தில் ஆழமாக விதைக்க இத்தகைய சுகாதார முகாம்கள் பெரிதும் துணைபுரிகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!