
கோலாலம்பூர் – ஆகஸ்ட் 30 – இன்று, பிரிக்பீல்ட்ஸ் NU Sentral வளாகத்தில், ம.இ.கா வின் மகளிர் பிரிவு மற்றும் தேசிய புத்ரா பிரிவும் இணைந்து 68 வது தேசிய தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேசிய கொடிகளை வழங்கி தேச உணர்வைப் பகிர்ந்து கொண்டனர்.
ம.இ.கா வின் தேசிய மகளிர் பிரிவு தலைவி சரஸ்வதி நல்லதம்பி அவர்களும், தேசிய புத்ரா பிரிவின் தலைவர் டத்தோ டாக்டர் சதீஸ் ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்றது.
மேலும் ம. இ. கா வின் மத்திய செயலளவை உறுப்பினர் சிவசுப்ரமணியம் அவர்களும் ஒன்றிணைந்து நிகழ்வை வெற்றி பெற செய்திருக்கிறார்.
மெர்டேக்கா தினதையொட்டி ஏற்பாடு செய்திருந்த இந்த அற்புதமான நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட ம.இ.கா உறுப்பினர்கள் குறிப்பாக மகளிர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ம. இ. கா ஆண்டு தோறும் தங்களின் தேச பற்றை நிலைநாட்டுவதில் ஒருபோதும் தவறுதில்லை என்பதற்கு சான்றாக இம்முறை தேசிய கொடிகளை வழங்கி மக்கள் மத்தியில் தேச உணர்வை வேரூன்ற செய்திருக்கின்றனர்.