Latestமலேசியா

புதியத் தலைமையின் கீழ் இஸ்ரேலை தாக்கிய ஈரான்; பதற்றம் அதிகரிப்பு

தெஹ்ரான், மார்ச்-9-புதியத் தலைமையின் கீழ் ஈரான், இஸ்ரேலை நோக்கி தனது முதல் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.

ஆயதொலா அலி காமேனி கொல்லப்பட்டப் பிறகு, அவரது மகன் மொஜ்தபா கமேனி ஈரானின் புதிய உச்சத் தலைவராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இஸ்ரேலின் பல பகுதிகளில், குறிப்பாக டெல் அவிஃப் மற்றும் ஜெருசலம் உள்ளிட்ட நகரங்களில் அவசர எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன.

பாய்ந்து வரும் ஏவுகணைகளை தடுத்து நிறுத்த, இஸ்ரேலின் வான்வழி தற்காப்பு முறைகள் செயல்படுத்தப்பட்டதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்த தாக்குதல் மத்திய கிழக்கு வட்டாரத்தில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலையை மேலும் தீவிரப்படுத்தும் என அனைத்துலக சமூகங்கள் கவலை வெளியிட்டுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!