Latestமலேசியா

புதிய சாதனையைப் பதிவுச் செய்த மலாயா பல்கலைக்கழகம்; QS உலகத் தரவரிசையில் 56வது இடம்

கோலாலம்பூர், ஜூன் 18 – மலாயா பல்கலைக்கழகம் (UM), QS உலகப் பல்கலைக்கழக தரவரிசை 2027-இல் 58ஆவது இடத்திலிருந்து 56ஆவது இடத்திற்கு முன்னேறி தனது வரலாற்றிலேயே சிறந்த தரவரிசையைப் பதிவு செய்துள்ளது.

இந்தச் சாதனையால், மலாயா பல்கலைக்கழகம் மலேசியாவின் முதலிடம் வகிக்கும் பல்கலைக்கழகமாக தனது நிலையைத் தக்கவைத்ததுடன், உலகின் முன்னணி 3.7 விழுக்காடு பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

மலேசியப் பல்கலைக்கழகங்களில் கல்வி நற்பெயர், வேலைவாய்ப்பு வழங்குநர்களின் மதிப்பீடு, பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு மற்றும் நிலைத்தன்மை (Sustainability) ஆகிய துறைகளில் மலாயா பல்கலைக்கழகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

இந்த வெற்றி, பல்கலைக்கழகத்தின் கல்வித் தரம், ஆராய்ச்சி திறன் மற்றும் உலகளாவிய அங்கீகாரத்தை வெளிப்படுத்துவதாக துணைவேந்தர் நூர் அஸுவான் அபு ஒஸ்மான் (Noor Azuan Abu Osman) தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!