Latestமலேசியா

பெரிக்காத்தான் நேஷனல் தலைமைத்துவத்தில் அதிரடி மாற்றம்: அஸ்மின் அலி, ரட்ஸி ஜிடின் முக்கிய பதவிகளிலிருந்து நீக்கம்

கோலாலம்பூர், ஜூன்-18-பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் அதிரடி தலைமைத்துவ மறுசீரமைப்பில், பெர்சாத்து கட்சியின் முக்கிய தலைவர்களான டத்தோ ஸ்ரீ அஸ்மின் அலி மற்றும் டத்தோ Dr ரட்ஸி ஜிடின் ஆகியோர் தங்களின் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

​வரவிருக்கும் ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சம்சூரி மொக்தார் தெரிவித்தார்.

கூட்டணியின் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து அஸ்மின் அலி நீக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, ரட்ஸி ஜிடின் வகித்து வந்த PN தேர்தல் இயக்குநர் பொறுப்பு, பாஸ் கட்சியின் தேர்தல் இயக்குநர் டத்தோ ஸ்ரீ சனுசி முஹமட் நோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

​மேலும், சனுசி வகித்து வந்த PN பொருளாளர் பதவிக்கு, மலேசிய இந்திய மக்கள் கட்சியான MIPP துணைத் தலைவர் எஸ். சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.

அஸ்மின் அலியின் துணைப் பொதுச் செயலாளர் பதவிக்கு இன்னும் புதிய மாற்றுத் தலைவர் அறிவிக்கப்படவில்லை.

​பாஸ் மற்றும் பெர்சாத்து கட்சிகளுக்கு இடையே அண்மையில் ஏற்பட்ட அரசியல் விரிசலுக்கு மத்தியில் இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெர்சாத்து தலைவர்களின் களையெடுப்பு, பெரிக்காத்தான் கூட்டணியிலிருந்து அக்கட்சி விரைவிலேயே வெளியேற்றப்படலாம் என்ற ஆருடத்தை அதிகரித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!