நிபோங் தெபால், ஜூன் 16 – டி.எல்.பி எனப்படும் புதிய இரட்டை மொழி பாடத்திட்ட அமலாக்கத்தில் சில பள்ளிகளுக்கு விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதை கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் (Fadhlina Sidek ) மறுத்தார்.
பெற்றோர்களின் விருப்பத்திற்கு எதிராக இருந்தாலும் முதல் வகுப்பில் குறைந்தது ஒரு வகுப்பும் மற்றும் முதல் படிவத்தில் ஒரு வகுப்பும் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் மலாய் மொழியில்
(Bahasa Melayu )வில் போதிக்கப்பட வேண்டும் என இரட்டை மொழிக்கான புதிய வாழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரசாங்க பள்ளிகளும் இந்த வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் விலக்கு எதுவும் அளிக்கப்படவில்லையென பட்லினா கூறினார்.
இந்த அமலாக்கத்தில் விவகாரத்தை எதிர்நோக்குபவர்கள் இதற்கு தீர்வு காணும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இந்த நடைமுறை திட்டமிட்டபடி அமல்படுத்துவதற்கு பள்ளிக்கு உதவும்படி சுங்கை பக்காப் தேசிய பள்ளியில் செய்தியாளர்களிடம் பேசியபோது பட்லினா தெரிவித்தார்.
தங்கும் வசதிகளைக் கொண்ட சில பள்ளிகளுக்கு இதில் விதிவிலக்கு வழங்கப்பட்டிருப்பதாக அல்லது சலுகை காட்டப்பட்டதாக வெளியான தகவலை மறுத்தார்.
அனைத்து அரசாங்க பள்ளிகளும் இரட்டை மொழி பாடத்திற்கான புதிய வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.