Latestமலேசியா

புதிய MyKad அறிமுகம்: உடனடியாக மாற்ற வேண்டிய அவசியமில்லை – சைஃபுடின் விளக்கம்

ஜோகூர், மே 8 – தேசிய அடையாள ஆவணங்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், மலேசிய அரசாங்கம் ஜூன் முதல் புதிய தோற்றத்துடன் பாஸ்போர்ட் மற்றும் மைக்காட் (MyKad) அட்டையை அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ளது.

இந்நிலையில் மக்கள் உடனடியாக தங்களின் மைக்காட்டை புதுப்பிக்க அவசியமில்லை என கூறியுள்ளார் உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில்.

12 வயதுக்கு மேற்பட்ட மலேசியர்கள் அனைவரும் கட்டாயம் மைக்காட் அட்டை வைத்திருக்க வேண்டும். அறிமுகப்படுத்தப்படவிருக்கும் இந்த புதிய மைக்காட்டிற்கு அனைவரும் மாற்றிக்கொள்வது சிறப்பு. ஆனால், அவர்கள் உடனெர் மாற்றவேண்டும் என்பதில்லை என புக்கிட் காகர்(Bukit Cagar) ரயில் நிலையத்தில் உள்ள குடிவரவு, சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு (ICQS) வளாகத்தில், ஜோகூர் பாரு-சிங்கப்பூர் விரைவுப் போக்குவரத்து அமைப்பு (RTS) இணைப்புத் திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்த பின்னர் இவ்வாறு பேசினார்.

நாட்டில் 20 மில்லியன் க்கும் மேற்பட்டோர் மைக்காட் வைத்திருப்பதால் அனைவரும் ஒரே நாளில் தேசிய பதிவு துறை அலுவகத்திற்குச் சென்றால் அங்கு மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது மிக கடினமாகி விடும்.

எனவே, அனைவரும் படிப்படியாக சென்று தங்கள் மைக்காட் அட்டையை மாற்றிக் கொள்ளுங்கள் என மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!