Latestமலேசியா

3R விவகாரங்களை சர்ச்சை முறையில் பேசய போட்காஸ்ட்: இருவர் கைது

ஷா ஆலாம், ஆகஸ்ட்-8-3R எனப்படும் மதம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள் தொடர்பான நிந்தனை விவகாரங்களைப் பேசியதாக, போட்காஸ்ட் நடத்திய இருவரைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.

மதச்சார்பின்மை மற்றும் தாராளமயக் கோட்பாடுகள் குறித்து அவர்கள் பேசிய வீடியோ முன்னதாக வைரலானது.

இதையடுத்து ​பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், அந்த போட்காஸ்ட் நிகழ்ச்சி நெறியாளரான 30 வயது ஆடவரும், 60 வயது வர்த்தகரும் நேற்று முன்தினம் கைதாகினர்.

​குற்றவியல் சட்டம், தொடர்பு மற்று பல்லூடகச் சட்டம், தேச நிந்தனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவுச் செய்யப்பட்டு அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வேளையில், ​சமூக நல்லிணக்கத்திற்கும் பொது அமைதிக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையிலான கருத்துகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு, அனைத்துப் படைப்பாளிகளுக்கும் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!