புத்ராஜெயா, மே-13, புத்ராஜெயாவில் வீடு பூட்டப்பட்டிருந்ததால் பால்கனி சுவரில் ஏற முயன்ற ஐந்தாம் படிவ மாணவன், கால் இடறி ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்து படுகாயமடைந்தான்.
Presint 11-ல் உள்ள Melinjau PPAM அடுக்குமாடி குடியிருப்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
வீட்டு சாவியுடன் தனது தாய் அடுக்குமாடியின் கீழ் தளத்தில் இருக்க, அவசரத்தில் அவனாக முந்திக் கொண்டு வீட்டின் பின் பக்க பால்கனியில் ஏற முயன்றுள்ளான்.
அப்போது கன மழை வேறு என்பதால், கால் வழுக்கி ஐந்தாவது மாடியில் இருந்து கீழே விழுந்தான்.
விழுந்ததில் தலையில் ரத்த கசிவு ஏற்பட்டு, புத்ராஜெயா மருத்துவமனையில் அவன் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
உடல் ஒத்துழைக்கத் தொடங்கியதும் அவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.