
ஈப்போ, மே-28-சுமார் 120 ஆண்டு காலம் கால பழமை வாய்ந்த ஈப்போ ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேக விழா இன்று திரளான பக்தர்களின் முன்னிலையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
ஈப்போ புந்தோங் சுங்கை பாரி வழியில் எழுந்தருளியுள்ள இந்த ஆலயம் பேரா மாநிலத்தில் தாய் கோவிலாக விளங்கி வருகிறது.
ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் தலைவர் ஆர். சீத்தாராமன் தலைமையில் நடைபெற்ற இந்த கும்பாபிஷேக நிகழ்வில் ம.இ.காவின் தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ A. சிவநேசன், துனையமைச்சர் M.Kulasegaran ஆகியோரும் சிறப்பு வருகை புரிந்தனர்.


இந்த ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்திற்கு மேலும் 30,000 ரிங்கிட் வழங்குவதாக சிவநேசன் அறிவித்தார்.
இதற்கு முன்பு ஒரு லட்சம் ரிங்கிட் வழங்கப்பட்டதோடு , ஈப்போ இந்து தேவஸ்தானம் பராமரித்து வரும் மின் சுடலையை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு 1.2 மில்லியன் ரிங்கிட் வழங்கியதையும் சிவநேசன் நினைவுக் கூர்ந்தார்.
மேலும் ஜூலை 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் ஈப்போவில் உள்ள கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய திருமண மண்டபத்தில் தேசிய அளவிலான இருநாள் முருகன் மாநாடு இலவசமாக நடைபெறும் என்றும் இதற்கான செலவுகளை பேரா மாநில அரசு ஏற்றுக் கொள்ளும் என்றும் சிவநேசன் குறிப்பிட்டார்.
சுமார் 10 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்ட இந்த ஆலய திருப்பணிக்கு பொது மக்கள் நல்ல ஆதரவையும் ஒத்துழைப்பும் வழங்கியதாக ஈப்போ இந்து தேவஸ்தான பரிபா சபா செயலாளர் வெ. மு. தியாகராஜன் கூறினார்.
தமிழகத்தைச் சேர்ந்த சேர்ந்த குருக்களும் , மலேசிய குருமார்களும் இணைந்து இந்த கும்பாபிஷேக விழாவை நடத்தியதை பக்தர்கள் வரவேற்றனர்.



