கோலாலம்பூர், டிச 26 – புருணையின் Tutong கிலுள்ள Jalan Penanjong நெடுஞ்சாலையில் ஒரு பெரிய முதலை வாகனத்தால் மோதப்பட்டதால் பாதையில் கவிழ்ந்து இறந்து கிடக்கும் படங்கள் வைரலாகி வருகின்றன.
சிறிய SUV வாகனம் அந்த முதலையை மோதியதைத் தொடர்ந்து அந்த வாகனத்தின் டயர் கழன்று கிடப்பதும் காணப்பட்டது.
அந்த வாகனம் அதிக வேகமாக சென்றதால் முதலையை மோதியிருக்கக்கூடும் என நெட்டிசன் ஒருவர் தெரிவித்தார்.
இந்த விசித்திரமான சம்பவத்தினால் நெட்டிசன்கள் வேடிக்கை மற்றும் குழப்பத்திற்கு உள்ளாகினர்.
மேலும் சிலர் முதலையை ஓட்டுநர் கவனிக்கத் தவறியது எப்படி என்று கேள்வி எழுப்பினார்.
வாகன ஓட்டுனர் வேகமாக சென்றதால் முதலையை மீது கவனம் செலுத்தாமல் இருந்திருக்கலாம் என பலர் கருத்துக்களை பதிவு செய்தனர்.