கோலாலம்பூர், ஏப் 16 – இஸ்ரேல் சம்பந்தப்பட்ட பொருட்களை புறக்கணிக்கும் நடவடிக்கையில் சம்பந்தப்பட்டவர்கள் வரம்பு மீறக்கூடாது என கூட்டரசு பிரதேச mufti Luqman Abdullah கேட்டுக்கொண்டுள்ளார். அவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும். குறிப்பிட்ட சில Brand அல்லது பொருட்களை புறக்கணிப்பது ஒரு பயனீட்டாளரின் உரிமையாகும். பொருட்களை புறக்கணிப்பதை பின்பற்றும்படி மற்றவர்களை கட்டாயப்படுத்த முடியாது என Luqman நினைவுறுத்தினார்.
மக்கள் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளிலும் நல்ல பழக்கவழக்கங்களையும் ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டுமென மக்களை கேட்டுக்கொள்வதாக Luqman தெரிவித்தார். பயனீட்டாளர்கள் உண்மைகளின் மதிப்பீட்டின் அடிப்படையில் McDonald போன்ற பிராண்டுகளை புறக்கணிக்கலாமா வேண்டாமா என்பதை தீர்மானிக்க வேண்டும். குவந்தானில் உள்ள McDonald மையத்திற்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவரை ஐவர் கொண்ட கும்பல் ஒன்று மிரட்டியதாக வார இறுதியில் தகவல் வெளியானதைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டனர்.