Latestமலேசியா

இலக்கு மானியத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த அரசாங்கத்திற்கு கோரிக்கை

கோலாலம்பூர், ஏப் 16 – டீசல் கடத்தலை தடுப்பதற்கு இலக்கு மானியத் திட்டத்தை விரைந்து அமல்படுத்தும்படி அரசாங்கம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மக்களுக்கு தேவையான உதவி சென்றடைவதை இந்த நடவடிக்கை உறுதிப்படுத்தும் என மலேசிய பயனீட்டாளர் சம்மேளனமான Fomca வின் தலைமை செயல் அதிகாரி Saravanan Thambirajah தெரிவித்திருக்கிறார். இந்த அணுகுமுறை உலகளாவிய மானியத்தை நீக்குகிறது, இது கவனக்குறைவாக, கடத்தல்காரர்களுக்கு பயனளிக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். இந்த ஆண்டு கடத்தல் சம்பவங்கள் அகிரிக்கும் என உள்நாட்டு வாணிகம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சு வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி சரவணன் இந்த கருத்தை வெளியிட்டார் .

இந்த ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி வரை 3.2 மில்லியன் லிட்டர் டீசல் சம்பந்தப்பட்ட 324 வழக்குகள் இருப்பதாக உள்நாட்டு வாணிகம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சின் தலைமை இயக்குனர் Zubir Hamzah கூறியிருந்தார். Op Tiris மூலம் இவ்வாண்டு மார்ச் 27ஆம் தேதிவரை பறிமுதல் செய்யப்பட்ட டீசலின் மதிப்பு 7.5 மில்லியன் ரிங்கிட் ஆகும். டீசலுக்கான மானியம் நீக்கப்படும்போது 80 விழுக்காடு முதல் 85 விழுக்காடுவரையிலான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஏப்ரல் 1ஆம் தேதி தெரிவித்திருந்தார். இந்த நடவடிக்கையானது கசிவு மற்றும் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!