சிங்கப்பூர், ஜூன் 8- சிங்கப்பூருக்குள் ஆறு பூனைக் குட்டிகளை கடத்த முயன்ற மலேசிய ஆடவர் ஒருவர் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டார் . தனது காரில் அந்த பூனைக் குட்டிகளை மறைத்து எடுத்துச் சென்றபோது வூட்லண்ட்ஸ (Woodlands) பரிசோதனை மையத்தில் அவற்றை அதிகாரிகள் கண்டுப்பிடித்தனர். 28 வயதுடைய லாவ் வெய் பின் ( Law Wei Bin ) என்ற அந்த ஆடவர், அனுமதியின்றி அந்த பூனைக் குட்டிகளை இறக்குமதி செய்ததாக நேற்று குற்றஞ்சாட்டப்பட்டார். தாம் ஓட்டிச் சென்ற மலேசியாவில் பதிவு செய்த காரில் ஜூன் 6ஆம் தேதி இரவு மணி 8.20 அளவில் அந்த பூனைக்குட்டிகளுடன் Wei Bin கைது செய்ய்பட்டதாக குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டது.
காரின் உள்ளே முன்புறப் பகுதியில் மாற்றியமைக்கப்பட்ட பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த உயிருடன் இருந்த நிலையில் அந்த பூனைக் குட்டிகள் கண்டுப்பிடிக்கப்பட்டன. இது தொடர்பான இதர விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் அவருக்கு கூடிய பட்சம் 10,000 சிங்கப்பூர் டாலர் அல்லது 34,880 மலேசிய ரிங்கிட் அபராதம் அல்லது 12 மாதம் சிறை அல்லது இவ்விரண்டும் விதிக்கப்படலாம். Wei Bin 10,000 சிங்கப்பூர் டாலர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டு எதிர்வரும் ஜூலை 5ஆம் தேதி மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.