பூனையைக் காப்பாற்ற முயன்றவர் 4 மீட்டர் ஆழ கால்வாயில் விழுந்து காயம்

மலாக்கா, மே-16,
மலாக்காவில் பூனையைக் காப்பாற்ற முயன்ற ஒருவர், 4 மீட்டர் ஆழமான கால்வாயில் விழுந்து காயமடைந்தார்.
32 வயது அந்நபர், ஆயர் குரோவில் உள்ள தாமான் மலாக்கா பெர்டானாவில் தனது வீட்டின் பின்னாலிருந்த புதர்பகுதியில் பூனை ஒன்று சிக்கியிருப்பதை பார்த்ததாக கூறப்படுகிறது.
அதை மீட்க முயன்ற போது, அவர் நடந்து சென்ற கான்கிரீட் கால்வாய் மூடி திடீரென உடைந்ததால், அவர் உள்ளே விழுந்தார்.
இதில் அவரது வலது கால் முறிந்ததுடன், சுமார் 30 நிமிடங்கள் அவர் கால்வாயில் சிக்கியிருந்தார்.
உதவி கோரிய சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் மீட்க முயன்றாலும், கால்வாயின் ஆழம் மற்றும் காயத்தின் தீவிரம் காரணமாக அது சாத்தியமாகவில்லை.
பின்னர் மலாக்கா தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து அவரை பாதுகாப்பாக மீட்டனர்.
அவ்வாடவர் பூனையை மீட்பதற்கு முன்னரே அது எங்கேயோ ஓடிவிட்டதாகத் தெரிகிறது.



