Latest

பங்கோர் தீவில் இந்தோனேசியக் குடியேறிகளின் படகு கவிழ்ந்து இதுவரை 16 பேர் மரணம்

லூமுட், மே-16,

இந்தோனேசியக் குடியேறிகளை ஏற்றிச் சென்ற படகு பங்கோர் கரையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இதுவரை 16 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சட்டவிரோதப் பாதைகள் வழியாகப் பயணித்ததாகக் கூறப்படும் இந்தக் கள்ளக் குடியேறிகளின் படகு, மோசமான வானிலை மற்றும் அலைகளின் சீற்றம் காரணமாகக் கவிழ்ந்திருக்கலாம் என தொடக்கக் கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையினர் தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

இவ்விபத்தில் ஏற்கனவே 23 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

காணாமல் போனவர்களைத் தேடும் பணி இன்று ஏழாவது நாளாகத் தொடருகிறது.

ஒருவேளை, இன்று புதிதாக சடலங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால், தேடல் பணிகள் நிறுத்தப்படலாம் என, அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!